கணவனைப் பிரிந்து காதலனுடன் சென்ற இளம்பெண், கைக்குழந்தையுடன் தெருவில் பிச்சையெடுக்கும் அவலம்.
வேலூரில் கணவரைப் பிரிந்து காதலித்த இளைஞருடன் சென்ற இளம்பெண் ஒருவர் குழந்தையுடன் கோவில் கோவிலாக பிச்சை எடுக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
வேலூர் சங்கரன் பாளையத்தில் பியூட்டிசியனாக வேலைபார்த்துவந்த பிரியா, தனது கணவர் சுரேஷை ஏமாற்றிவிட்டு காதலன் மல்லன் என்பவருடன் வீட்டை விட்டுச்சென்றுள்ளார். அவர்களுக்கு 10 மாத பெண்குழந்தை இருந்த நிலையில் பிரியாவுக்கு வேலை இல்லாததால் அவரை சித்ரவதை செய்த மல்லன் , பிரியாவையும் குழந்தையையும் கோவில் கோவிலாக பிச்சை எடுக்க வைத்துள்ளான். திருமண மண்டபங்களில் தன்னை சாப்பாட்டுக்கு கையேந்த விட்டதாக கண்ணீர் வடிக்கிறார் பிரியா
ஒரு கட்டத்தில் காதலன் மல்லன் குழந்தையை விலைக்கு விற்க திட்டமிட்டுள்ளான். அதனை தடுத்தபோது தன்னைக் கடுமையாக தாக்கி தலைகீழாக தொங்கவிட்டதாகவும், தன்னுடைய குழந்தை கடத்திச்செல்லப்பட்டது குறித்து காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள பிரியா, தனக்கு நேர்ந்த கொடுமை வேறு பெண்களுக்கு நிகழ்க்கூடாது என்று வேதனை தெரிவித்தார். காதல் கண்ணை மறைக்க கணவரை ஏமாற்றி செல்லும் பெண்களுக்கு பிரியாவின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கை.
கருத்துகள் இல்லை