ரூ.10 லட்சம் மதிப்பிலான கோவில் பொருட்கள் கொள்ளை.
விழுப்புரம் அருகே ஆலயத்தில் ஐம்பொன்சிலை மற்றும் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சு.பில்ராம்பட்டு கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் சுமார் 6 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் அம்மன் சிலை, கற்பகிரகத்தில் இருக்கும் அம்மனின் மீது போடப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் மதிப்பிலான வைர மூக்குத்தி, கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாயின் உதவியுடன் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மர்ம நபர்கள் கோவிலில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறைக்கு சென்று, அங்குள்ள ஒயர்களை பெயர்த்து எடுத்துவிட்டு பின்னர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதால், கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை