சீனாவை எதிர்கொள்ள இந்தியா புதிய வியூகம்.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் உளவு பார்க்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் குறித்து இந்திய கடற்படையினர் எச்சரித்துள்ள நிலையில், கடல்பரப்பில் தனது அதிகாரத்தை கைப்பற்ற அமெரிக்காவுடன் இந்தியா கைகோர்த்துள்ளது.
வங்கக் கடலில் வருகிற 10ம் தேதி முதல் இந்திய போர்க்கப்பல்களுடன் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் போர்க்கப்பல்கள் கூட்டாக போர் ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. இதில் 15 பிரம்மாண்டமான போர்க்கப்பல்களுடன் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள், கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள், சண்டைக்கு பயன்படும் ஜெட் விமானங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
கருத்துகள் இல்லை