Header Ads

  • சற்று முன்



    சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக 100 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுப் பண்ணைய திட்டம்.


    கூட்டுப் பண்ணைய முறை என்பது, ஒரே கிராமத்தில் அருகருகே நிலங்களை தொகுப்பாகப் பெற்ற சிறு, குறு விவசாயிகள் 20 பேர் ஒரு குழுவாக ஒருங்கிணைத்து, வேளாண், தோட்டக்கலை வல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் பயிரிடும் புதுமையான முறை என என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
    தலா 500 ரூபாய் கட்டணத்தில் இக்குழுவில் இணையும் உறுப்பினர்களுக்கு சிறந்த தொழில் நுட்பமுறைகளைப் பயன்படுத்த வசதி வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
    சிறுகுறு விவசாயிகள், அரசு ஏற்படுத்தித் தரும் கடன் வசதி மூலம் டிராக்டர், டில்லர், நுண்ணீர் பாசன அமைப்பு, நீர் எடுத்துச் செல்லும் குழாய் ஆகிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் வேளாண்மை தொடர்பான பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, 5 லட்சம் ரூபாய் மூலதன நிதி தவணை முறையில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விளைவித்த பொருட்களுக்கு நல்ல விலையில் சந்தையிடுதல் வாய்ப்பும் இத்திட்டத்தின் மூலம் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
    இந்த கூட்டுப் பண்ணைய முறைத் திட்டத்தால், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுவர் என தமிழக அரசு கூறியுள்ளது. 2017-2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதல் பெற்று, அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
    தலா 20 விவசாயிகள் கொண்ட குழுவாக நடப்பாண்டில் இதேபோன்று, 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அரசு கூறியுள்ளது.
    இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாயினை அரசு வழங்குவதன் மூலம், வரும் 5 ஆண்டுகளில் 40 லட்சம் சிறு குறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்படுவார்கள் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad