இறக்குமதி செய்யப்படும் மொபைல்ஃபோன்களுக்கு 10% அடிப்படை சுங்கவரி.
இறக்குமதி செய்யப்படும் மொபைல்ஃபோன்கள் மற்றும் பாகங்களுக்கு, மத்திய அரசு 10 சதவீத அடிப்படை சுங்கவரி விதித்துள்ளது. உள்நாட்டில் மொபைல்ஃபோன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
எனவே, இறக்குமதி செய்யப்படும் மொபைல்ஃபோன் மற்றும் பாகங்களுக்கு 10 சதவீத அடிப்படை சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளபோதிலும், அவற்றை தயாரிப்பதற்கான உள்ளீட்டுப் பொருட்கள் இறக்குமதிக்கு, அடிப்படை சுங்க வரியிலிருந்து அளிக்கப்படும் விலக்கு தொடரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி-க்கு முன்பு இருந்த வரி விகிதங்களின்படி, இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட் ஃபோன்கள், உள்நாட்டு தயாரிப்பைவிட சந்தையில் 11.5 சதவீதம் விலை உயர்ந்தவையாக இருந்தன.
ஆனால் மொபைல் ஃபோன்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி என்ற சீரான நிர்ணயத்தால், உள்நாட்டு தயாரிப்புகளுக்கு இருந்த சாதக நிலை பாதிக்கப்பட்டது. இதைத் தடுக்கவே இறக்குமதி செய்யப்படும் மொபைல் ஃபோன்கள் மற்றும் உதிரி பாகங்களின் மீது அடிப்படை சுங்கவரி 10 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள போதிலும், அடிப்படை சுங்க வரி முறையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை