சர்வதேச செம்மரக்கடத்தல்காரன் கைது.
சர்வதேச அளவில் நடைபெறும் செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்புடையர் ஆந்திர மாநிலம் சித்தூரில் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
பெங்களூரை சேர்ந்த ஹாஜி நஜீர் என்ற நபர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செம்மரம் கடத்திய வழக்கில் திருப்பதி போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்.
இந்நிலையில் சித்தூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில், ஹாஜி நஜீர் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், காரில் இருந்த 200 கிலோ செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை