சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு.
சென்னை முகப்பேரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவர் தனது மகளுடன் அயப்பாக்கம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், சுமித்ராவின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையைப் பறித்துச் சென்றனர்.
ஜெ ஜெ நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கிலியை பறித்துச் சென்றவர்களின் உருவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதால், அதை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை