நிதி நிறுவன மோசடியில்,19 ஆண்டுகளுக்கு பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைக்கிறது.
சேலத்தில் தனியார் நிதி நிறுவன மோசடியில், பாதிக்கப்பட்ட மூவாயிரத்து 250 பேருக்கு, 19 ஆண்டுகளுக்கு பின்னர் பணம் கிடைக்க உள்ளது.
சேலத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது, நிதி நிறுவனத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், செலுத்திய பணத்தை திருப்பி தர முடியாததால், சண்முகம் குடும்பத்துடன் கடந்த 1998 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது சொத்துக்களை விற்று, முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து சண்முகத்தின் உறவினர்கள், கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
சேலம் நீதிமன்றத்தின் தீர்ப்பையே, உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன்பின்னரும் பணத்தை வழங்க, சண்முகத்தின் உறவினர்கள் காலம் தாழ்த்தி வந்தனர். இதையடுத்து, சேலம் நீதிமன்றத்தில் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், 2 மாதத்திற்குள் அசல் 26 கோடி ரூபாயையும், பின்னர் வட்டி 60 கோடி ரூபாயையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Casino Royale - Live Dealer Games - Virgin Games
பதிலளிநீக்குCasino Royale is a live https://febcasino.com/review/merit-casino/ casino with a large, eclectic febcasino.com portfolio of casino games. Players 토토 can play bsjeon.net this game with live https://vannienailor4166blog.blogspot.com/ dealers,