தமிழகம் முழுவதும் இன்று நான்காவது நாளாக திரையரங்குகள் மூடல்.
கேளிக்கை வரிவிதிப்பை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் 4வது நாளாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஜிஎஸ்டியுடன் கேளிக்கை வரியும் விதிக்கப்படுவதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசு விதிக்கும் கேளிக்கை வரியை நீக்க கோரி தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 100 தியேட்டர்களை காலவரையின்றி மூடி 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என்று திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அரசு தரப்பில் எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை