சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் திளைக்கும் அமெரிக்க மக்கள்.
அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியுயார்க் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் களை கட்டின. வாண வேடிக்கைகள், கொடி அணிவகுப்புகள் போன்றவற்றுடன் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஹாட்-டாக் பன்களை உண்ணும் போட்டி நடைபெற்றது. இதற்காக நியுயார்க்கின் கோனி தீவு பகுதியில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக திரண்டிருந்தனர். நடப்பு சாம்பியனான ஜோயி செஸ்ட்நட் தமது பத்தாவது ஆண்டு வெற்றியை தக்க வைத்துக் கொண்டார். 72 பிராங்க்பர்ட்டர் பன்களை பத்தே நிமிடங்களில் விழுங்கினார்.
இதனிடையே மன்ஹாட்டனில் செப்டம்பர் 11-ந் தேதி உலக வர்த்தக மையம் மீது தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற நினைவிடத்தில் பலர் சிறிய அமெரிக்க கொடிகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை