Header Ads

  • சற்று முன்



    ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ராகுல் காந்தி


    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அக்கட்சியின் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைப்பதற்காக (13-Mar-2019) தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ராகுல்காந்தி விமான நிலையத்தில் இருந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு சென்றார்.

    அங்கு மாணவிகளுடனான கலந்துரையாடலில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

    ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் உரையாற்றினார் ராகுல் காந்தி.

    பெண்கள் உரிமையைப் பொறுத்த வரையில் வட இந்தியாவைவிட தென்னிந்தியாவில் பெண் உரிமை சிறப்பாகவே உள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மாணவிகளிடம் பேசிய ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம் ராகுல் என்றே அழையுங்கள் என்றும் கூறியுள்ளார்.

    கல்லூரி மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் உங்கள் தாயிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொண்ட நல்ல குணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தன் தாயிடம் இருந்து மனித நேயத்தை கற்றுக் கொண்டதாக அவர் பதிலளித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad