Header Ads

  • சற்று முன்



    கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் சென்னையில் 5 இடங்களில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது

    சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, சிறிய அளவிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், 5 இடங்களில் அமைக்கப்பட்டு, விரைவில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.

    இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, எம்.ஆர்.சி நகர், திருவான்மியூர் ஆகிய 5 இடங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன.

    120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள, இந்த கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், அடுத்த 6 மாதங்களில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் சேவையை தொடங்கும். ஒவ்வொரு கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மூலம், ஒரு லட்சம் பேருக்கு, நல்ல தண்ணீரை அளிக்க முடியும்.

    இந்த வகையில், 5 இடங்களில் ஏற்படுத்தப்படும், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம், 5 லட்சம் பேரின் தாகத்தை தணிக்க முடியும் என, சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மூத்த பொறியாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

    காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, எம்.ஆர்.சி நகர், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் முற்றாக குறைந்துவிட்டதை அடுத்தே, அந்த பகுதியில், முன்னுரிமை அடிப்படையில், சிறிய அளவிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad