Header Ads

  • சற்று முன்



    காவல் ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்.

    வழக்கு ஒன்றில் ஆஜராகத் தவறிய மதுரை காவல்நிலைய ஆய்வாளர் ஒருவருக்கு நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

    மதுரை காவல்நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் ஸ்டீபன் ஜோஸ் கடந்த 2017ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் பணகுடி காவல்நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.

    அப்போது லெப்பை குடியிருப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் என்பவரது மனைவி மற்றும் மகளை அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர்களை அவதூறாகப் பேசியதாகவும் ஸ்டீபன் ஜோஸ் மீது வழக்கு தொடரப்பட்டது.

    தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மேலும் ஒரு வழக்கு ஸ்டீபன் ஜோஸ் மீது தொடரப்பட்டது. இந்த 2 வழக்குகளிலும் குறிப்பிட்ட தேதியில் ஆஜராகவில்லை எனக் கூறி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad