Header Ads

  • சற்று முன்



    பாரசீக வளைகுடாவில் போர் பதற்றம். வரலாறு காணாத படுதோல்வியை சந்திக்கப்போகிறதா அமெரிக்கா?


    ஈரானை மிரட்ட தன் பெரும் ஆயுதங்களை காட்ட தொடங்கியிருக்கும் அமெரிக்கா, கூட்டாளிகளையும் தங்கள் தளத்தினையும் தயார் செய்ய தொடங்கிவிட்டது.

    நிச்சயம் சிரியாவில் அமெரிக்காவுக்கு படுதோல்வி, மிக கேவலமான தோல்வி. நினைத்த ஆட்சி மாற்றத்தை அவர்களால் செய்யவே முடியவில்லை.

    முதல் காரணம் ரஷ்யா இரண்டாம் காரணம் ஈரான். சன்னி ஈராக் இப்பொழுது ஈரானின் பரிபூரண கட்டுபாட்டில் இருப்பதும் அமெரிக்காவுக்கு எரிச்சல், போதாகுறைக்கு ஏமனிலும் ஈரானின் செல்வாக்கு உண்டு.

    ஆக சவுதி, குவைத், பஹ்ரைன், ஓமன் தவிர எல்லா நாடுகளிலும் ஈரானின் செல்வாக்கு அதிகரிக்க அவர்களை மிரட்டி ஒடுக்கும் முடிவுக்கு வந்துவிட்டது அமெரிக்கா.

    இதில் கத்தார் என்றொரு நாடு உண்டு, அரேபியாவில் அமெரிக்காவின் மாபெரும் படைதளம் அங்குதான் உண்டு
    சவுதிக்கும் கத்தாருக்கும் ஆகாது, சவுதிக்கும் ஈரானுக்கும் ஆகாது எனும் நிலையில் கத்தாரும் ஈரான் பக்கம் சரிகின்றது. இதுதான் அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சி.

    இதனால் ஜோர்டான், சவுதி, ஆப்கன் என தன் தளங்களை தயார் செய்யும் அமெரிக்கா கத்தார் தளத்தில் வெறும் தளவாடங்களை நிறுத்துகின்றது, பெரும் தொழில்நுட்பம் ஏதுமில்லை.

    1990களில் சதாம் மேல் போர் தொடுத்து பெரும் ஆயுத கண்காட்சியினை நடத்திய அமெரிக்கா இப்பொழுதும் அப்படி ஒரு நவீன ஷோவினை நடத்த துடியாய் துடிக்கின்றது.

    ஆனால், சதாமினை அடிக்கும் பொழுது புட்டீன் இல்லை, ஜின்பெங் இல்லை என்பது வேறுவிஷயம்.

    1979 இஸ்லாமிய புரட்சியில் இருந்தே அமெரிக்காவுடன் யுத்தத்தை எதிர்பார்க்கும் ஈரான் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கின்றது.

    என்ன சொல்லுங்கள் ஈரானியர்கள் அதிரடியானவர்கள் சந்தேகமில்லை.
    ஏன் அப்படி?

    அதுதான் சித்தாந்தம் என்பதற்கும் தனிநபர் துதிக்கும் உள்ள வித்தியாசம்.
    சவுதி குவைத் ஜோர்டான் பஹ்ரன் எல்லாம் மன்னர்கள் என்ற தனிநபர் ஆட்சியில் அமெரிக்க அடிமையாகிவிட்டன‌.

    ஈரோனோ கோமேனி ஏற்றிவைத்த சுயமரியாதை ஷியா தீயில் மிக வலுவான நாடாக எழுந்து நிற்கின்றது.

    அரேபிய நிலை சொல்வது அதுதான், தனிநபர் துதிபாடல் எதையும் சாதிக்காது. சித்தாந்த எழுச்சி என்பது காலம் காலமாக தொடங்கி வரும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad