Header Ads

  • சற்று முன்



    கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ்.

    சாரதா நிதிநிறுவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு எதிராக சிபிஐ சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தா மாநிலத்தில் நடைபெற்ற சாரதா நிதிநிறுவன முறைகேடு வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக ராஜீவ் குமார் இருந்தார். இவர் தலைமையில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதால் விசாரணையை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

     ராஜீவ்குமார் சிறப்பு விசாரணைக்கு குழுவின் தலைவராக இருந்தபோது, அந்த வழக்கு தொடர்புடைய செல்போன், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை அழித்துவிட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. 

    இதுதொடர்பாக ராஜீவ் குமார் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, கொல்கத்தா காவல்துறை- சிபிஐ இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ராஜீவ் குமாருக்கு ஆதரவாக, சிபிஐ அமைப்பைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். 

    இதனிடையே, ராஜீவ் குமாரை கைது செய்ய விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம், கடந்த வாரம் விலக்கிக் கொண்டு சட்டப்படி சிபிஐ செயல்பட அனுமதி வழங்கியது. 

    இந்நிலையில், வெளிநாட்டுக்கு செல்லாமல் ராஜீவ் குமாருக்கு, லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர் விசாரணைக்காக (இன்று) சிபிஐ முன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad