Header Ads

  • சற்று முன்



    யார் இந்த கான்ட்ராக்டர் நேசமணி?

    நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் அவரது தாயின் வயிற்றுக்குள் குரங்கு போன்று குத்தவைத்தே பிறந்தவர் நேசமணி. 

    சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.

    தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. ஆனால், அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்'
    என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை.

    மீண்டும் குற்றாலத்திற்கு வந்து ஒரு டிவிஎஸ் 50 ஊர் சுற்றிக் கொண்டு கடலைமிட்டாய்
    வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி.

    இதற்கிடையில் நேசமணி துபாயிலும் இரண்டு வருடங்கள் கேக்ரான் மேக்ரான் கம்பெனியில் வேலை பார்த்தார். அங்கிருந்து சாதிசனத்தை பார்க்க வேண்டுமே, மண்ணை மாற்ற வேண்டுமே என்று பேராசைப்பட்டு இந்தியா வந்தார். இப்படி இருந்தபோது
    தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையை நாடறியும்.

    இப்படி எந்தத்தொழிலும்  சரிவரவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. 

    வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் என்ற முடிவெட்டும் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க்,
    ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. 

    ஆனால், அந்த தொழிலும் சில துஷ்ட சக்திகளால் பறி போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும்,
    அவர் எலுமிச்சை உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும்  நடந்தேறியது நேசமணியின் வாழ்வில்.

    யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப் போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகனாலேயே சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு
    தற்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. அவருக்காக உலகமே பிரார்த்திக்கிறது, நீங்களும் கொஞ்சமாவது பிரார்த்தனை செய்யுங்கள் 😉😜

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad