ஆண்டுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கும் மேலாக, பணப் பரிவர்த்தனை செய்தால் வரி விதிப்பு.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் மத்திய அரசு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே 50 ஆயிரத்துக்கும் மேல் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வோருக்கு பான் கார்டு தேவைப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிக பணத்தை வங்கியில் இருந்து எடுப்பவர்களுக்கும் வரி விதிக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
வரும் ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை