Header Ads

  • சற்று முன்



    ஆண்களுக்கும் உதவித்தொகையுடன் 6 மாதகால பேறுகால விடுமுறை - Zomato நிறுவனத்தின் அசத்தல்.

    மகப்பேறு காலங்களில் விடுமுறை அளிப்பதில் பெண்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ, அதேயே நாங்கள் ஆண் ஊழியர்களுக்கும் வழங்க உள்ளோம். இந்த சலுகை, குழந்தையை தத்தெடுப்பவர்களுக்கும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும், வாடகைத்தாயாய் இருப்பவர்களுக்கும் பொருந்தும்
        
    உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமாட்டோ,  ஆண் ஊழியர்களுக்கும் 26 வாரங்கள் பெற்றோர்கள் கடமை விடுமுறை(new parental leave policy) வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    இந்தியச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்தநிலையில், சோமாட்டோ உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் தொழிலாளர்களிடம் வரவேற்பைப் பெறும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 'புதிதாக குழந்தைப் பிறக்கும் ஆண், பெண் இருவருக்கும் சம்பளத்துடன் கூடிய 26 வாரம்(ஆறு மாதம்) விடுமுறை அளிக்கப்படும். மேலும், ஒரு குழந்தைக்கு உதவித்தொகையாக சுமார் 70 ஆயிரம் ரூபாய்(1000 அமெரிக்க டாலர்) வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளது. இதற்கு பெற்றோர் கடமை விடுமுறை((new parental leave policy) என்று பெயரிட்டுள்ளது.

    இதுகுறித்து பிளாக்கில் பதிவிட்டுள்ள சோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், 'சொந்த வாழ்க்கையின் இலக்கும், அலுவலக வாழ்க்கையின் இலக்கும் எப்போது அர்த்தமுள்ளதாக இருக்கிறதோ அப்போதுதான் ஊழியர்கள் சிறந்த வேலையை அளிப்பார்கள். என்னைப் பொறுத்தவரையில், குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் விடுமுறை அளிக்கும் கொள்கையில் சமமற்றத் தன்மை நிலவுகிறது.

    மகப்பேறு காலங்களில் விடுமுறை அளிப்பதில் பெண்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ, அதேயே நாங்கள் ஆண் ஊழியர்களுக்கும் வழங்க உள்ளோம். இந்த சலுகை, குழந்தையை தத்தெடுப்பவர்களுக்கும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும், வாடகைத்தாயாய் இருப்பவர்களுக்கும் பொருந்தும்' என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய அறிவிப்பு மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமாக சோமாட்டோ உள்ளது. உலகம் முழுவதும் 13 நாடுகளில் தங்களது உணவு டெலிவரி சேவையை சோமாட்டோ வழங்கி வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad