Header Ads

  • சற்று முன்



    முறைக்கேட்டை அம்பலப்படுத்திய செய்தியாளரை, தாக்கி இழுத்துச்சென்று வாயில் சிறுநீர் கழித்து அட்டூழியம் செய்த ரயில்வே காவலர்கள்.

    உத்தரப்பிரதேசத்தில் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படும் நிலையில், ரயில்வே காவலர்களால் தாக்கப்பட்ட செய்தியாளர் ஒருவர், தன் வாயில் சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்தியதாக அதிர்ச்சிகர வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர்கள் கைதானதும், தாக்கப்பட்டதும் நடந்த நிலையில், சரக்கு ரயில் தடம்புரண்டதைப் படம்பிடிக்கச் சென்ற தனியார் சேனல் செய்தியாளர் சாதாரண உடையில் இருந்த ரயில்வே காவலர்களால் தாக்கப்பட்டார்.

    அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களை ரயில்களில் விற்பனை செய்ய சட்டவிரோதமாக அனுமதித்து மாதத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாயை ரயில்வே காவலர்கள் லஞ்சமாக சம்பாதிப்பதாக கடந்த மாதம் அதே செய்தியாளர் தங்கள் சேனலுக்கு செய்தி அளித்தார்.

    அந்த ஆத்திரத்திலேயே தாம் தாக்கப்பட்டதாகவும் சுமார் 200 மீட்டர் தூரம் வரை தன்னைத் தாக்கியபடியே இழுத்துச் சென்று லாக்கப்பில் வைத்து, தன் வாயில் சிறுநீர் கழித்ததாகவும் ரயில்வே காவலர்கள் மீது பாதிக்கப்பட்ட செய்தியாளர் குற்றம்சாட்டியுள்ளார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad