Header Ads

  • BREAKING



    தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி.

    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது. நிலம் கையகப்படுத்தும் மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும்  ஹரிஜன் நல சட்டம் ஆகிய சட்டங்களை பாதுகாக்கும் விதத்தில் தமிழக அரசின் புதிய சட்டம் அமைந்தது. 

    இந்த சட்டத்தை எதிர்த்து ராமநாதபுரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர்கள் தரப்பில், விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில், புதிய சட்டத்தை ரத்து செய்தால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

    இதையடுத்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad