Header Ads

  • BREAKING



    தொடர் நேரலை செய்ததை தவிர ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்படவில்லை - உயர்நீதிமன்றம்

    அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர் பலி வேண்டுமா - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

    தொடர் நேரலை செய்ததை தவிர எந்த ஊடகங்களும் சமூக பொறுப்புடன் செயல்படவில்லை..- 
    மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை- நீதிபதிகள் அதிருப்தி

    மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும்.- நீதிபதிகள் 
    விழிப்புணர்வு கொண்டுவர ஊடகங்கள் தான் அதிக பங்கு வகிக்கிறது.

    ஒவ்வொரு தனி மனிதனும் சமூக பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் - நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வு. 
    அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றபடுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை..- நீதிபதிகள்

    ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி பொன்ராஜ் என்பவர் வழக்கு..

    பலியான சுஜித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- மனுதாரர். 
    ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா ? - நீதிபதிகள் கேள்வி

    இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..?

    பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகளின் எண்ணிக்கை என்ன..? 
    விதிகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது..?

    நவம்பர் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad