Header Ads

  • BREAKING



    திமுக வழக்கறிஞர் அணியின் வலிமைக்கு காரணம் என்ன? என்.ஆர்.இளங்கோ பதில்கள்.

    திமுக வழக்கறிஞர் அணி மிகவும் வலிமையான சட்ட அணியாக உள்ளது. தன்அரசியல் வாழ்வில் மத்திய அரசால் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் கலைஞர். அதனால், கட்சியை காக்க வலிமையான வழக்கறிஞர் அணி வேண்டும் என்கிற திட்டமிடல் அவரிடம் இருந்ததா?


    என்.ஆர்.இளங்கோ: கலைஞர் வழக்கறிஞர் அணி மீது காட்டிய அக்கறையில் நீங்கள் சொல்லும் காரணம் இருந்திருக்கிறது. இந்திரா காந்தி வழக்கு, சட்டநகல் எரிப்பு வழக்கு, ராஜிவ் காந்தி மரண்ம தொடர்பான ஜெயின் கமிஷன் வழக்கு என எத்தனையோ வழக்குகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம். 


    ஆனால் இன்னொருபுறம் மிகச்சிறந்த வழக்கறிஞர்கள் கழகத்தோடு தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்கள். திரு என்.கணபதி, திரு என்.வி.என் சோமு, திரு ஏ.எல்.சுப்ரமணியம், திரு.பழனிவேல் ராஜன், இன்றைக்கு மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன் என பலரும் கட்சிக்காக உழைக்கிறார்கள். 

    உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே மிக முக்கியமான தீர்ப்புகளை வழங்கிய ரத்னவேல் பாண்டியன் திமுகவில் மாவட்டச் செயலாளராக இருந்தவர். இத்தனை முக்கியமான ஆளுமைகள் இருந்ததும், வழக்கறிஞர் அணியின் முக்கியத்துவத்துக்கு காரணம். 


    ராஜிவ் கொலை வழக்கில் திமுகவை எப்படியாவது சம்பந்தப்படுத்திவிட முடியுமா என திட்டமிட்டார்கள். மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கட்சியின் சார்பில் அதை எதிர்த்து வாதாடினார். 

    டான்சி எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஆர்.எஸ்.பாரதி அண்ணன். வழக்கு நடத்தியது சண்முக சுந்தரம். அதற்கு பரிசாக எத்தனை வெட்டு? அதையெல்லாம் தாண்டி பயனப்படுவதால்தான் வழக்கறிஞர் அணி வலிமையாக உள்ளது.

     

    இன்று வழக்கறிஞர் அணியில் 10000 பதிவுசெய்யப்பட்ட வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் மிகப்பெரும்பான்மையானோர் தனிப்பட்ட வகையில் தங்கள் தொழிலில் சிறந்தவர்கள். கட்சிக்குத் தேவை என்றால் 1 மணிநேரத்தில் அனைவரையும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் ஒருங்கிணைக்க முடியும். மேலும், அடுத்த தலைமுறை இளைஞர்கள், வழக்கறிஞர்கள் கட்சியை நோக்கி ஆர்வத்துடன் வருகின்றனர்.


    இவ்வளவு பலம்வாய்ந்த கட்டமைப்பு இந்தியாவில் வேறு எந்தக்கட்சிக்கும் கிடையாது. இந்த வலிமை மூலமாகத்தான் எங்கள் மரபையும் தக்க வைக்கிறோம்.


    07.03.20 அன்று பத்திரிகையாளர் விவேக் கனநாதனுக்கு நேர்காணல்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad