ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க நிதி கொடுத்த சூர்யா - நன்றி தெரிவித்த MP!
மாமதுரை அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்.
ஆதரவற்றவர்களுக்கு அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று மதிய உணவு வழங்கும் மாமதுரை அன்னவாசல் திட்டம் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ளது. மே 1-ம் தேதி முதல் தினமும் 3 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய உணவுடன் முட்டையும் சேர்த்து வழங்கப்படுகிறது.
இந்த மாமதுரை அன்னவாசல் திட்டத்துக்கு நடிகர் சூர்யா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்திருப்பதாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
https://twitter.com/SuVe4Madurai/status/1259728707867914240?s=19
கருத்துகள் இல்லை