இந்திய - சீன ராணுவ மோதல், அதிகரிக்கும் வீரர்களின் உயிர்ப்பலி?
இந்திய எல்லைப் பகுதியில் இந்திய - சீன எல்லைப் பிரச்சினை பேச்சுவார்த்தையின்போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இதுவரை 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 வீரர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவம் இரு தினங்களுக்கு முன் கட்டை கம்புகளைக் கொண்டு தாக்கிக் கொண்டது. இதன் காரணமாக இருநாடும் தங்கள் ராணுவ வீரர்கள் பலரை இழந்துள்ளது.
இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நம் நாட்டை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். முதலில் 3 என வெளியான உயிர்ப் பலி எண்ணிக்கை நேற்று இரவு 20ஆக உயர்ந்தது.
இந்த சண்டை நடந்த பகுதி வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவும் உள்ள ஆக்ஸிஜன் குறைந்த பகுதி. இதனால் காயமடைந்த வீரர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
20 ராணுவ வீரர்கள் மரணம் என்ற செய்தி வெளியான சூழலில் இப்போது இந்த உயிர்ப் பலி உயரக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சீனா தரப்பில் எத்தனை ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை