கன்னியாகுமரி : வறுமையால் உதவி கேட்ட சிறுமி - உதவிக்கு பலனாக பாலியல் சீண்டல்.
கன்னியாகுமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.
ஊரடங்கு பொருளாதார சிக்கலில் வாழ்வாதாரம் இழந்து வறுமைக்கு உதவி கேட்டுச்சென்ற சிறுமியின் வறுமையை பயன்படுத்தி பணம் கொடுத்ததோடு, சிறுமியிடம் சிலர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது.
தேங்காய்பட்டணம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் முகமது நூகு (75), ஸ்டூடியோ நடத்தி வரும் சகாய தாசன் (52), ஜாகீர் உசேன்(53), அப்துல் ஜாபர் (66) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதான இரண்டு சிறார்கள் என ஆறு பேர் பாலியல் தொந்தரவு கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார், ஆறு பேரையும் கைது செய்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் முதியவர்கள் நால்வரையும் மாவட்ட சிறையில் அடைத்த போலீசார், சிறுவர்கள் இருவரையும் நெல்லை சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
கருத்துகள் இல்லை