Header Ads

 • BREAKING  அல்சர் என்ற இரைப்பைப் புண் பற்றிய ஒரு பார்வை.


  இன்றைய வாழ்க்கைச் சூழலில், வயது வித்தியாசமின்றி எல்லோரும் எதிர்கொள்கிற ஆரோக்கியப் பிரச்சினை அல்சர், இன்றைய நவீன வாழ்க்கையில், நம்மோடு சேர்ந்தே பயணிக்கிறது.

  நமது இரைப்பையில் புரத உணவை செரிமானம் செய்ய இரைப்பை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கின்றது. ஒரு நாளில், கிட்டத்தட்ட 1.5 லிட்டர், ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. HCl அமிலம் நமக்கு உணவு செரிமானம், கிருமி எதிர்ப்பு, வைட்டமின்கள் உட்கிரகிப்பு என பல வகையான பயன்களை தருகின்றது. இரைப்பையில் அதிகஅமில சுரப்பு நிலையே, (GERD) Gastro Esophageal Reflux Disease, (LPR) Laryngo Pharyngeal Reflux ஆகியவற்றிற்கு காரணமாக உள்ளது.

  இரைப்பையில் HCl அமிலம் அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் மியூகஸ் படலம் சிதைவதை இரைப்பை அலர்ஜி Gastritis என்கிறோம்

  தொண்டையில் தொடங்கி, உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை ‘பெப்டிக் அல்சர்’ என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால், ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer). முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால், ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer).

  அழற்சிக்கு காரணங்கள்:

  காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது,

  மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி தேநீர் அதிகமாகக் குடிப்பது.ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற மாத்திரைகளை மருத்துவ ஆலோசனை இன்றி சாப்பிடுவது. மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன. கலப்பட உணவு, மாசடைந்த நீர் ஆகியவற்றில், 'ஹெலிக்கோபாக்டர் பைலோரி' (Helicobacter pylori) எனும் கிருமி, இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது.

  அல்சரின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். மேலும் பசியின்மை, புளித்த ஏப்பம் உண்டாகும். அல்சரில், இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். அல்சர் அறிகுறிகள் தெரிந்தால், தாமதிக்காமல் இரைப்பை சிறப்பு மருத்துவரிடம் என்டோஸ்கோப்பி செய்துகொள்ள வேண்டும். அல்சர், முன்சிறுகுடலில் இருந்தால், குடலில் துளை, (DU perforation) விழுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இரைப்பைப் புண் தொடர்ந்து இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக கவனம் தேவை.

  இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), ‘பிபிஐ’ (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன. தக்க மருந்து மற்றும் உணவுப் பழக்கத்தின் மூலம் 90 %,  இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம். இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது.வ‌யி‌ற்று‌‌ப் பு‌ண் வராம‌ல் இரு‌க்க தினமும் மூன்று வேளை உணவையும் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணவேண்டும். வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவு வகைகள் நன்மை தரும். விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். போதுமான அள‌வி‌ற்கு, சுத்தமான த‌ண்‌ணீ‌ர் பருகுவது‌ம் வ‌யி‌ற்று‌க்கு ஏ‌ற்றது. (H.Pylori) கிருமி தாக்குதலை தவிர்க்கும்.

  இரைப்பைப் புண் குணமாக, கவலைகளில் இருந்து விடுபட வேண்டும். மன அமைதியும், ஓய்வும் மிக முக்கியம். Life style modifications.. எனும் வாழ்க்கை முறை மாற்றம், இரைப்பைப் புண் வராமல் தடுக்கிறது. 

                                           - டாக்டர். முபாரக்  

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad