அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம், கறுப்பின இளைஞருக்கு இறுதிச்சடங்கு..!
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னபொலிஸ் என்ற இடத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற இளைஞரை போலீசார் கழுத்தில் மிதித்துக் கொன்றனர். இதையடுத்து ஜார்ஜ் மரணத்திற்கு நீதி கேட்டும், இனவெறி மற்றும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்கா மட்டுமின்றி உலகில் பல நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாயிட்டின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் இன்று நடக்க உள்ளன. இதையடுத்து அவரது சொந்த ஊரான ஹூஸ்டன் நகருக்கு அவரது உடல் கடந்த 6ம் தேதி கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு காரணமாக கூறப்படுகிற மின்னபொலிஸ் நகர போலீஸ் துறையை கலைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள நகர கவுன்சிலில் மொத்தம் உள்ள 13 கவுன்சிலர்களில் 9 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை