Header Ads

  • BREAKING



    திருப்பத்தூர் | ஆம்பூர் பகுதியில் போலீஸாருடனான வாக்குவாதத்தில் தீக்குளித்த இளைஞர் உயிரிழந்த சோகம். விபரீத முடிவுக்கு மதுபோதையும் ஒரு காரணம்.

    கடந்த 12-ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் நகர போலீஸார், ஊரடங்கு விதிமீறலுக்காக முகிலன் என்பவரின் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முகிலன், மதுபோதையில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

    இந்த சர்ச்சை தொடர்பாக 3 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு டிஎஸ்பி தலைமையில் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தவிட்டார் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS.

    80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரை காப்பாற்ற மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து ஒரு உயிரை காப்பாற்றும் நோக்கத்தில் சிறப்பு சிகிச்சைக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்தும் காப்பாற்ற முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்.

    மேலும், இறந்த நபருக்கு 6 மாத கைகுழந்தை உட்பட மூன்று குழந்தைகள் இருக்கிறது. வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பச் சூழலில் அவர் தற்கொலை முடிவை எடுப்பதற்கு மதுவும் ஓர் காரணம். இறந்த நபரின் மனைவிக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், விதவைக்கான மாதாந்தர உதவித் தொகை கிடைக்கவும் ஆட்சியர் மூலமாக ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad