Header Ads

  • BREAKING



    30க்கும் மேற்பட்ட நாடுகளுடன் பஞ்சாயத்து, அமெரிக்காவுக்கு போட்டியாக சண்டியர்த்தனம் செய்யும் சீனா

    இந்தியாவுடன் மட்டும் அல்ல தனது ஒவ்வொரு அண்டை நாட்டுடனும் எல்லையில் பிரச்சனையை வைத்திருக்கிறது சீனா. என்னென்ன நாடுகள் என்னென்ன பிரச்சனை விரிவாக காணலாம்.

    கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீன ராணுவ வீரர்களின் மோதல் அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தான் தற்போது உலகின் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது ஏனெனில் மக்கள் தொகை எண்ணிக்கையில் அடுத்தடுத்த 2 இடங்களைப் பிடித்துள்ள மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை கொண்டுள்ள இந்த இரண்டு நாடுகளுக்கிடையே ஒருவேளை போர் ஏற்பட்டால் அது உலகம் முழுவதிலுமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதால்தான்.

    கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது போல பல தருணங்களில் சீனா தனது அண்டை நாடுகளிடமும் இத்தகைய அத்து மீறலை செய்துள்ளது. 

    தென்கொரியா ரஷ்யா மங்கோலியா கஜகஸ்தான் கிர்கிஸ்தான் தஜிகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இந்தியா நேபால் பூட்டான் மியான்மர் லாவோஸ் வியட்நாம் என மொத்தம் 14 நாடுகளுடன் சீனா தனது எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது.

    22,000 கிலோமீட்டர் தூரத்தினை தனது எல்லை நாடுகளுடன் சீனா கொண்டுள்ளது.

    அக்சை சின் ஆக்கிரமிப்பு 1962 போர் போர் தொடங்கி தற்போதைய கல்வான் பள்ளத்தாக்கு ஆக்கிரமிப்பு வரை இந்தியாவுடனான சீனாவின் எல்லைப் பிரச்சினைகள் நாம் அனைவரும் அறிந்ததே எனவே இதுகுறித்து விரிவாக பார்க்க தேவையில்லை. இமாச்சல் பிரதேசம் வடகிழக்கு மாநிலங்கள் லடாக் பகுதி என இந்தியாவின் சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் பகுதிகளை சீனா தனது என சொந்தம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான்:

    523 கிலோமீட்டரை சீனா பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் இந்தியாவை தாக்க பாகிஸ்தானை தற்போதும் ஒரு அடியாளாகவே சீனா பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இந்தியா உள்ளிட்ட அந்நாட்டின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளில் சீனா தனது ராணுவ தளவாடங்களை அமைக்கவும் சாலைகளை விரிவாக்கம் செய்து கொள்ளவும் பாகிஸ்தான் அனுமதி கொடுத்துள்ளது. அனுமதி என்று கூட சொல்ல முடியவில்லை அதை சீனா தானாகவே இதனை செய்து வருகிறது ஏனென்றால் பாகிஸ்தானின் கழுத்தின் மீது சீனா கொண்டுள்ள இறுக்கும் அப்படியானது.

    வடகொரியா:

    1416 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள எல்லைப் பகுதியை வடகொரியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ள சீனா இரண்டு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள பெக்து என்ற மலையை சொந்தம் கொண்டாடுவது தான் பிரச்சனைக்கு காரணம் இந்த மலையிலிருந்து தான் யாலு மற்றும் துமென் என்ற இரண்டு நதிகள் இரண்டு தரப்பிற்கும் பலன் அளித்து வருகிறது. அதேபோல வடகொரியா சீனா இடையிலான 200 மைல் அகலமுள்ள கடல்பகுதியில் தனக்குள்ள ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக தொடர்ந்து அந்நாட்டுடன் பிரச்சனையில் இருந்து வருகிறது சீனா.

    ரஷ்யா:

    சுமார் 4 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் தொலைவினை ரஷ்யாவுடன் சீனா எல்லையாகக் கொண்டுள்ளது. ஜிகன்போ தீவு உள்ளிட்ட சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை வரலாற்று ரீதியில் தனது என சொல்லி வருகிறது சீனா. இருப்பினும் ரஷ்யாவின் அதிதீவிர ராணுவ பலம் காரணமாக பல்வேறு அமைதி உடன்படிக்கை உடன் சற்று மென்மையான போக்கை தான் சீனா கடைபிடித்து வருகிறது.

    வியட்நாம்: 

    1300  கிலோமீட்டர் பரப்பை வியட்னாம் உடன் பகிர்ந்து கொண்டுள்ள சீனா எல்லைப் பிரச்சினையை மையமாகக் கொண்டு 1954 - 75 என பல்வேறு சண்டைகளில் ஈடுபட்டிருக்கிறது. வியட்நாம் உடனான தரைவழி மற்றும் கடல்வழி மிகமுக்கியமாக சீனாவிற்கு வர்த்தக ரீதியில் தேவைப்படுவதால் சற்று அமைதி காத்தாலும் தொடர்ந்து அந்த நாட்டுடனான எல்லை பிரச்சனை அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

    நேபாளம்:

    1415 கிலோமீட்டர் சீன நேபால் எல்லையாக இருக்கின்றது. திபெத்தைப் போலவே நேபாளம் சீனாவுடன் சேர்ந்தது என ஒரு காலத்தில் சொந்தம் கொண்டாடி வந்த சீனா இந்தியாவை எதிர்ப்பதற்காக நேபாளத்திற்கு தற்போது அதிக அளவிலான பொருளாதார உதவிகளையும் முதலீடுகளையும் செய்து வருகிறது இருப்பினும் நேபாளத்திற்கு சீனா என்றைக்கு இருந்தாலும் காலைச் சுற்றிய பாம்பு தான்.

    பூடான்:

    சீனா பூடான் உடன் வெறும் 470 கிலோமீட்டர் மட்டுமே எல்லையாகக் கொண்டுள்ளது ஆனால் 495 சதுர கிலோமீட்டர் பரப்பை சீனா தனது என சொந்தம் கொண்டாடி வருவது கவனம் கொள்ளத்தக்கது. இந்தியாவில் கட்டுப்படுத்த பூட்டான் உதவி மிக முக்கியமானது என்பதால் சீனா அங்கும் சற்று அடக்கி வாசித்தே வருகிறது

    கஜகஸ்தான்:

    ஆயிரத்து 700 கிலோமீட்டரை கஜகஸ்தான் நாடு உடன் எல்லையாகக் கொண்டுள்ள சீனா சோவியத் யூனியன் காலத்திலிருந்தே இந்த பகுதியில் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. 1998 எட்டாம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அதற்கு பிரதிபலனாக சீனா கஜகஸ்தானில் செய்த முதலீடு ஆகியவை இருநாடுகளும் இணக்கமாக இருக்க உதவி புரிந்திருக்கிறது ஆனாலும் கஜகஸ்தான் ரஷ்யா உடனான நெருக்கத்தை அதிகரிக்கும் போதெல்லாம் சீனா தனது அதிகாரத்தை வெளிப்படுத்திய வருகிறது.

    மங்கோலியா:

    4677 கிலோ மீட்டரை மங்கோலியாவின் எல்லையாகக் கொண்டுள்ள சீனா, யான் ஆட்சி காலத்தில் மங்கோலியா சீனாவின் பகுதியாக இருந்ததை தற்போதும் சுட்டிக்காட்டி பிரச்சனை செய்து வருகிறது இருப்பினும் மங்கோலியா வழியான ரயில்பாதை சீனாவிற்கு முக்கியம் என்பதால் சற்று நிதானத்தை கடைபிடிக்கிறது சீன அரசு

    கிரிகிஸ்தான்: 

    கிர்கிஸ்தான் சீனா இடையே சுமார் 1500 கிலோ மீட்டர் எல்லையாக இருந்து வரும் நிலையில் சோவியத் யூனியன் காலத்திலிருந்தே பிரச்சனை இருந்து வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே இருந்த எல்லை பிரச்சினை காரணமாக 2010ஆம் ஆண்டு சீனா கிர்கிஸ்தான் உடனான எல்லையை முழுமையாக மூடியது குறிப்பிடத்தக்கது.

    தஜிகிஸ்தான்:

    தஜிகிஸ்தானில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தை பயன்படுத்தி சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பகுதியை சீனா ஒப்பந்தத்தின் மூலமாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது

    ஆப்கன்:

    வெறும் 210 கிலோ மீட்டரை மட்டுமே சீனா ஆப்கானிஸ்தான் நிலையாக இருந்து வரக்கூடிய நிலையில் ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பதக்ஹசான் மாகாணத்தின் பெரும்பகுதியை சீனா தற்போதும் ஆக்கிரமித்துக் கொண்டு அங்கு தங்களது படைகளை நிறுத்தி வைத்துள்ளது. உள்நாட்டுப்போர் தீவிரவாத தாக்குதல் அமெரிக்காவுடனான பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளுடன் எதையும் சமாளித்து வருகிறது.

    மயான்மர்: 

    2185 கிலோமீட்டரை பர்மா எனப்படும் மயான்மர் நாட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ள சீனா அந்த நாடு புராதான ரீதியாக சீனாவுடன் சேர்ந்தது என கூறிவருகிறது மியான்மரில் சீனாவின் பொருளாதார முதலீடுகள் ஏராளம் இருந்தாலும் தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் அந்நாட்டின் மீது ஒப்பந்தங்களை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    லாவோஸ்:

    வெறும் 55 கிலோ மீட்டரை லாவோஸ் நாட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ள சீனா 1991 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு மறைமுகமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    எல்லை நாடுகளைத் தவிர ஜப்பான் தென் கொரியா பிலிப்பைன்ஸ் என மற்ற நாடுகளுடனும் சீனா தொடர் பிரச்சனைகளில் ஈடுபட்டு தான் வருகிறது. இவைத்தவிர அமெரிக்காவுடனான பொருளாதார பனிப்போர் வேறு ஒருபுறம் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தனது எல்லை விரிவாக்கம் அதிகார விரிவாக்கம் ஆகிய காரணங்களுக்காக அமெரிக்காவைப் போலவே

     சீனாவும் பல்வேறு நாடுகளுக்கும் மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருவது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. 


    • நிரஞ்சன் குமார்

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad