மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பு இல்லை. சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையை துவக்கி வைத்து முதல்வர் பேட்டி.
அரசு கொரோனா வைரஸ் நோய் தடுக்க கடுமையான முயற்சி எடுத்து வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு மருத்துவமனையை துவக்கி உள்ளது. அதனடிப்படையில் கிண்டியில் கிங்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 95 பரிசோதனை மையம் உள்ளன. நாளொன்றுக்கு 35 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு மருந்துகள் வர அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது.
ஊரடங்கு காரணமாக பல்வேறு சிக்கல் ஏற்பட்டாலும், ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளித்த மக்களுக்கு எனது பாராட்டுகள்.
மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பு இல்லை என கருதுகிறேன்.
மக்கள் அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றினால், இந்த தொற்று குறைய வாய்ப்புள்ளது.
வாழ்வாதரம் முக்கியம்; அதையும் அரசு பார்க்க வேண்டும் என்று தான் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விடும்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முககவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் நாம் கொரோனாவில் இருந்து மீள முடியும்.
கருத்துகள் இல்லை