Header Ads

  • BREAKING



    போலி ஆவணங்கள் மூலம் SBI வங்கியில் 109 கோடி மோசடி, தனியார் நிறுவன உரிமையாளர் வீட்டில் சோதனை.

    சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் தங்கம் ஸ்டீல் என்கிற நிறுவனம், எழும்பூரில் உள்ள எஸ்பிஐ கிளையில், போலி ஆவணங்கள் மூலம் 109 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் வடிவாம்பாள் மற்றும்   ஸ்ரீனிவாசன் ஆகியோர், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவற்றில், 89 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதை கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள்,  மத்திய புலனாய்வு துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர்கள் வழக்குப் பதிவு செய்த புலனாய்வு அமைப்பு, அண்ணாநகரில் உள்ள அவர்களது இல்லத்திலும்,  நிறுவனத்தின் அலுவலகத்திலும் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி  இருப்பதாக தெரியவந்துள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad