Header Ads

  • BREAKING



    நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம்.


    நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பாக நாடுதழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

    இதனையொட்டி  புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாவட்ட தலைவர் க.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொது செயலாளர் பொன் கிருஷ்ணமூர்த்தி, அணுகுண்டு ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களஎழுப்பினர்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரபாண்டியன்
    "நாடு முழுவதும் இந்த போராட்டமானதுநடைபெறுகிறது. நீட் மற்றும் ஜேயியி தேர்வுகளை மத்திய அரசு கட்டாயமாக மாணவர்கள் மீதி திணிக்கிறது. கொரனோ தொற்று காலத்திலும் நீட் தேர்வுகளை மத்திய அரசு மாணவர்கள் மீது திணிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்"

    நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தவில்லை. தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தாலும் அது அனைவரிடமும் சென்று சேரவில்லை. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என்றார்.

    அதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர், பொன்கிருஷ்ணமூர்த்தி, அணுகுண்டு ஆறுமுகம், மோகனரங்கம், கணபதி, சூளை ராமலிங்கம், சஞ்சய், கமல், சர்க்கிள் தலைவர் சரவணன், சம்பத்குமார், சபீர் பாஷா, கார்த்திகேயன், ராஜா, வாஞ்சிநாதன், சுமதி, கீதா, தேவி, கலா, புனிதாசதீஷ் ஆகியோர்
    மக்களின் மன நிலை அறியாத அரசாக இந்த அரசு உள்ளது எனவும் நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும். இல்லையென்றால், உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad