Header Ads

  • BREAKING



    கேரளா விமான விபத்து, ஓடுபாதைக்கு 1 கிமீ முன்னதாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!


    விபத்திற்கு உள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து 184 பேரை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    போயிங் 737 NG வகையைச் சேர்ந்த ஏர் இந்தியாவிற்கு சொந்தமான பயணிகள் விமானம் நேற்றிரவு 7.41 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்பொழுது விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 127 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்திற்கு முன்னதாக, தரையிறங்க முயன்ற விமானம் ஓடுபாதைக்கு ஒரு கி.மீ முன்னதாகவே தரையிறங்கியதாக சிவில் ஏவியேஷன் ஒழுங்குமுறை இயக்குநரகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தரையிறங்கும் போது, ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.


    இன்று விபத்துக்குள்ளான இடத்திற்குச் சென்ற சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங், ஓடுபாதையை தவிர்த்தும் பல இடங்களில் விமானத்தின் எரிபொருள் சிதறி இருந்ததாக கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad