ஆக்கப்பூர்வமான விமர்சனம் என்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாக ஆகாது. @Arappor | @pbhushan1 | #SaveDemocracy | #IStandWithPrashantBhushan
தப்புக்கணக்கு போட்டு நீதிபதி குன்கா தீர்ப்பை ரத்து செய்த போது போகாத நீதிமன்ற மாண்பு பிரசாந்த் பூஷண் எழுதிய டிவீட்டால் போய்விட்டது என்று அவரை சிறைக்கு அனுப்ப துடிப்பது ஏன்?
மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம். அந்த நீதிமன்றத்தின் மாண்பு நீதிபதிகள் நடவடிக்கையால் தான் பாதிக்கப்படுமே தவிர பிரசாந்த் பூஷண் எழுதும் 2 டிவீட்டால் பாதிக்கப்படாது.
பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் ஒரு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அந்த வழக்கை தானே விசாரிக்கிறார். இதில் கெட்டு போகாத உச்சநீதிமன்றத்தின் மாண்பு பிரசாந்த் பூஷன் போட்ட இரண்டு டிவிட்டால் கெட்டு போய்விட்டதா ?
நீதிமன்ற அவமதிப்பு பொதுமக்களால் ஏற்படுவது கிடையாது. நீதிமன்ற உத்தரவுகளை நீதிபதிகள் நியமனத்தில் கூட மதிக்காத அரசாங்கத்தால் தான் ஏற்படுகிறது. எத்தனையோ பிரச்சனைகளால் மக்கள் அவதிப்படும் போது 2 ட்வீட்களை வைத்து நேரத்தை வீணடிப்பது சரியா?
சீல் செய்யப்பட்ட கவரில் வைத்து கொடுக்கப்படும் ஆவணங்களை வைத்து கொடுக்கப்படும் தீர்ப்புகளை மக்கள் எப்படி நம்புவார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் 2 ட்வீட்களை வைத்து நேரத்தை வீணடிப்பது யாருக்காக?
மக்களுக்கு நீதிமன்றங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது நீதிபதிகளின் கடமையே. இப்படி கருத்து உரிமைகளை பறிப்பதும், கருத்து சொன்னால் கைது என்று பழக்கத்தை கொண்டுவருவதும் நம் ஜனநாயகத்துக்கு எதிரானது. ஆபத்தானதும் கூட.
உச்சநீதிமன்றம் நம் ஜனநாயகத்தின் முதன்மை தூண் அல்ல. ஜனநாயகத்தின் தூண்களில் அதுவும் ஒன்றே! ஆக அதுவும் நம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதே! நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டதே!
நீதிமன்ற அவமதிப்பு நம் அரசியல் சாசனத்தில் ஒற்றுக்கொள்ளப்படாதது. ஆனால் கருத்து சுதந்திரம் என்பது நம் சாசனம் நமக்குத் தரும் பறிக்கமுடியாத உரிமை ஆகும்.
நம் ஜனநாயகம் என்பது உச்சநீதிமன்ற நீதிபதிகளுடையது மட்டும் அல்ல, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டுமானது அல்ல, உச்சநீதி மன்ற நீதிபதிகளால் மட்டும் ஆனது அல்ல.
உண்மையான ஜனநாயகத்தில், ஒரு சில நீதிபதிகளை விட மக்களாகிய நாமே முதன்மையானவர்கள்.
நம் சுதந்திர போராட்டத்திற்கு வழி வகுத்த மற்றும் நம் குடியரசு சாசனம் நமக்கு வழங்கும் அடிப்படை உரிமைகளான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு இது ஒரு கருப்பு தினம்.
திரு.பிரசாந்த் பூஷணுக்கு எதிரான அவமதிப்பு என்ற தீர்ப்பு மிகவும் நிலையற்றது.
இந்திய ஜனநாயகத்திற்கு இது ஒரு கருப்பு தினமாகும். இத்தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் தன்னையும் நமது குடியரசையும் முழுமையாகக் கைவிட்டுள்ளது.
யாரும் கேள்விகேட்க முடியாத உச்சபட்ச அதிகாரம் என்பது, சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளும் மனிதர்களே, கடவுளர்களல்ல.
ஜனநாயகத்தின் தூணானது இரண்டு ட்வீட்களால் அசைந்துவிடும் அளவு பலவீனமானதா?
யாருடைய எலும்பையும் முறிக்கவல்லதல்ல சொற்கள். ஒரு ட்வீட் நீதிமன்றத்தின் செயல்பாட்டில் தலையிடக்கூடுமாயின், நீதித்துறை அவ்வளவு எளிதாக நொருங்கத்தக்கதா?
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், புண்படுத்துவதாகவும், சட்டவிதிகளையும் இயற்கை விதிகளை மீறியதாகவும் உள்ளது. எவ்வளவு பெரிய இழிவு! அவமதிப்பை இழைத்தது யார்? உச்சநீதிமன்றமா அல்லது பிரசாந்த் பூஷணா?
சுயசார்பான மற்றும் வெளிப்படையான நீதித்துறையின் அவசியத்திற்கான உச்சகட்ட நேரம் வந்துநவிட்டது.
இயந்திரம் போல் சிறையில் அடைக்க அனுமதி தரும் மஜிஸ்ட்ரேட்டின் செயல் நீதிமன்ற அவமதிப்பு இல்லையாம், ஆனால் உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டை கேள்வி கேட்பது அவமதிப்பாம்.
- அறப்போர் இயக்கம்.
கருத்துகள் இல்லை