பேய் ஓட்டுவதாக மந்திரவாதி தாக்கி மகப்பேறு அடைந்த இளம்பெண் பலி.! கணவன் தப்பியோட்டம்.
தெலுங்கானா அருகே மந்திரவாதி அடித்து துன்புறுத்தியதில் மகப்பேறு அடைந்து இரண்டு மாதமே ஆன இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் மல்லேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ரஜிதா 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்றெடுத்துள்ளார். பிரசவம் நடந்த நாளிலிருந்து ரஜிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்துக்கொண்ட மல்லேஷ், உள்ளூர் பேயோட்டியான ஷியாம் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அவர் ரஜிதாவின் மீதுள்ள பேயை ஓட்ட, அடித்து துன்புறுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகி கட்டிலில் சாய்ந்த ரஜிதா, அப்படியே மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.
அதனையடுத்து ரஜிதாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ரஜிதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவரை இத்தனை நாட்களாக ஏன் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம் உள்ளூர் காவல் நிலையத்துக்கு தெரியவே, வழக்கு பதிவு செய்த போலீசார் ரஜிதாவின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக மந்திரவாதி ஷியாம் மற்றும் மல்லேஷின் உறவினரை கைது செய்ததோடு தப்பி சென்றுள்ள மல்லேஷை தேடி வருகின்றனர். பிரசவம் முடிந்த பெண்ணுக்கு மேலிற்கு முடியாமல் போனால் மருத்துவமனையில் உரிய சிகிச்சை கொடுத்து ஒய்வு எடுக்க செய்யாமல், பேய் ஓட்டும் பேரில் கண்மூடித்தனமாக உயிர் பிரியும் வரை அடித்திருப்பது மூடநம்பிக்கையின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
Best 10 Casino Near Santa Barbara, CA in Santa Barbara, USA - MapYRo
பதிலளிநீக்குFind best Casinos Near 서산 출장샵 Santa 제주도 출장샵 Barbara, California in Santa Barbara, 아산 출장안마 USA. Santa Ana, CA - Best Casino for 동해 출장샵 the Family, Fun or Good Fortune to 대구광역 출장샵 Stay in