வாகனவரியை ரத்து செய்யவேண்டும் டாக்ஸி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
பொதுமுடக்க வருவாய் இழப்பு. வாகனவரியை ரத்து செய்யவேண்டும் டாக்ஸி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
கொரோனா காலத்தில் கலாவதியான வாகனங்களின் உரிமங்களை புதுபிக்க அரசு காலத்தை நீட்டித்து தரவேண்டும், வாகனக் கடன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வட்டியை ரத்து செய்யவேண்டும், இ. பாஸ் முறையை அரசு அகற்ற வேண்டும்.
டாக்ஸி ஓட்டுநர்களுக்கு அரசு நிவாரனத் தொகையாக மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் வழங்கவேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு தடுக்க வேண்டும், எப்.சி. எடுக்கும் முறையை அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை