Header Ads

  • BREAKING



    தமிழகத்தில் பெருகிவரும் கள்ள துப்பாக்கி கலாச்சாரம். நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

    தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

    அப்போது பீஹார், ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் ரவுடிகள், அரசியல்வாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்யப்படுவதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இதனை தடுக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

    உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி கொள்ளையடித்ததாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், வட மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத்தனை பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். 

    மேலும் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? தமிழகத்தில் எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது, உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தனர். இது குறித்து 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad